ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு கொரோனா தொற்றியுள்ளதாக தெரிவித்த பெண், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இணையத்தளத்தில் போலியான பிரசாரத்தை மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, பெண் நடன கலைஞர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதவான் வை. பிரபாகரன், இந்த உத்தரவை இன்று (06) வழங்கியுள்ளார்.
தனியார் நடடி நிறுவனத்தின் பணிப்பாளராக கடமையாற்றும் வாதுவ,மஹவிஹார மாவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட திலிணி மீவனகே (41) என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு நிச்சயமாக கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது எனத் தெரிவித்து, தன்னுடைய முகப்புத்தகத்தில் பதிவொன்றை அப்பெண் இட்டுள்ளார். இதுதொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு பிரிவினர். அப்பெண்ணை கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்தியதன் பின்னரே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.