கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை, தனக்கிருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கூட்டுவார் எனத் தெரிவித்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவன்ச, அதற்கான தேவை ஜனாதிபதிக்கு தற்போதைக்கு இல்லை என்றார்.
அரசாங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி தலைமையிலான பிரதிநிதிகளுக்கும் இடையில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று (6) முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் பின்னர், ஜனாதிபதி மாளிகைக்கு வெளியில் குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு, இன்றைய கூட்டத்திலும் வலியுறுத்தப்பட்டது.
கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை ஜனாதிபதியால் கூட்ட முடியும். அதற்கான அதிகாரம் அவரிடம் உள்ளது. அதாவது, அவசரகால சட்டத்தை பிறப்பிக்க வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் அங்கிகாரம் பெறவேண்டும்.
ஆனால், தற்போதைய நிலைமையில், அவசரகால சட்டத்தை கொண்டுவருவதற்கான எந்தவிதமான தேவையும் தனக்கில்லை என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.