ஏப்ரல் 1ஆம் திகதி முட்டாள் தினமாகும். அன்றையதினம் ஒருவரையொருவர் பொய் கூறி ஏமாற்றுவது உண்டு.
தற்போது தொலைபேசி வாயிலாகவும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் பொய்களை பதிவிட்டு, நிறைய விருப்பங்களையும் கருத்துகளையும் பெறுவதிலேயே கூடுதலானோர் ஆர்வம் காட்டுகின்றனர்.
தற்போது முழு உலகையும் முடங்க செய்திருக்கும் கொரோனா தொடர்பில் பதிவுகள், அதனை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்பிலான வீடியோக்களும் உலாவுகின்றன.
இந்நிலையில், ஜனாதிபதி கோத்தாபயவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என, பதிவிட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதுதான் விளையாட்டு வினையானது என்பர்.
தனியார் நடனநிறுவனத்தின் பணிப்பாளராக கடமையாற்றும் வாதுவ,மஹவிஹார மாவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட திலிணி மீவனகே (41) என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.