இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தெஹிவளையைச் சேர்ந் 80 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த ஆறாவது நபர் இவராவார்.
இதனால், தெஹிவளையில் ஓரளவுக்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.