web log free
December 22, 2024

பாலியல் தொழிலாளர்களும் வீட்டிலிருந்து வேலை

கொரோனா வைரஸ் பரவல் எல்லோரையும் வீட்டிலேயே முடக்கிப் போட்டுள்ளது. பாலியல் தொழிலாளர்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

சொல்லப்போனால், கொரோனா வைரஸ் பரவுவதால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளவர்களும் அவர்களே.

இப்படியான சூழ்நிலையில் வாழ்வாதாரத்திற்காக அவர்களும் ஆன்லைன் மூலமாக தங்களது பணிகளை மேற்கொள்ளத் தொடங்கி உள்ளனர்.

இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய பிரிட்டனைச் சேர்ந்த க்ளியோ, “நாடு முடக்கப்பட்டதால் எங்கள் வருமானம் பாதிக்கப்பட்டது. அதனால் ஆன்லைன் ப்ளாட்ஃபார்மை பயன்படுத்தத் தொடங்கினோம்,” என்கிறார்.

“இணையத்தில் உடலைக் காட்டுவதால் மட்டும் பணத்தை ஈட்டிவிடமுடியாது. இது கடினமான பணி,” என்கிறார் மற்றொரு பாலியல் தொழிலாளியான க்ரேஸி.

கடந்த இரண்டு மாதங்களில் இதுபோன்ற பாலியல் தளங்களில், அவற்றின் பயன்பாட்டாளர்கள் பணம் செலவிடுவது அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக டென்மார்க்கில் அதிகம் செலவிடுகிறார்கள். அதற்கு அடுத்த இடங்களில் இஸ்ரேலும், பெல்ஜியமும் உள்ளன.

இந்தியாவில்

சமூக இடைவெளி போன்றவற்றைப் பின்பற்றலாம். ஆனால் எங்களால் எங்கள் தொழிலை செய்ய முடியாமல் போகிறது. இதனால் எங்களுக்கு வருமானம் இல்லாமல் போகிறது” என்கிறார் நாசிக்கை சேர்ந்த ரேகா.

கொரோனாத் தொற்று பரவல் காரணமாக சிவப்பு விளக்கு பகுதியில் இருக்கும் பாலியல் தொழிலாளர்களின் வேலை நின்றுவிட்டது. முடக்கம் அறிவிக்கும் முன்னரே பாலியல் தொழிலாளர்கள் தாமாகவே முன் வந்து தொழிலை நிறுத்தி விட்டனர். வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்க மறுத்தனர்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பாலியல் தொழிலாளர்கள், அவர்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

இந்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியா முழுவதும் சுமார் 30 லட்சம் பெண்கள் இந்தப் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

தொழில் இப்போது நின்றுவிட்டதால், பாலியல் தொழிலாளர்கள் வருமானத்தை இழந்தனர். இவர்களைச் சார்ந்து இருக்கும் சின்ன கடைகள் வைத்திருப்பவர்கள், ஏஜெண்டுகள் என அனைவரின் வருமானமும் நின்று விட்டது.

வருவாய் இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் உதவிகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அத்தகைய உதவிகள் சென்று சேரும் கடைசி சமூகக் குழுவினராக பாலியல் தொழிலை நம்பியுள்ளவர்களே இருக்கிறார்கள் என்கிறார் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாலியல் தொழிலாளர்கள் நலனுக்காக இயங்கும் ஷ்ரம்ஜீவி சங்காதன் எனும் அமைப்பின் டாக்டர் ஸ்வாதி கான்.

இதனால் இந்தியா முழுவதுமுள்ள பாலியல் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தொண்டு நிறுவனங்களின் உதவியை எதிர்பார்த்துள்ளனர்.

Last modified on Wednesday, 08 April 2020 09:01
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd