அக்குறணை முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கிருந்து தப்பியோடி, மாவத்தகமவில் மறைந்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதேசவாசிகள் வழங்கிய தகவல்களை அடுத்து, சுகாதார வைத்திய அதிகாரிகள், அவரை கைதுசெய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
32 வயதான அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டபோது, அக்குறணை குருகொட பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும், மாவத்தகம சிங்கபுர பிரதேசத்தில் வசிக்கும் தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளை பார்வையிடுவதற்கே வந்துள்ளார் என்று அறியமுடிகின்றது.
கைது செய்யப்பட்ட அந்த நபர், முழு குடும்பத்துடன் வீட்டுக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்