கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய 6 மாவட்டங்களை தவிர்த்து, ஏனைய 19 மாவட்டங்களுக்கும், இன்று (09) காலை 6 மணிமுதல் 4 மணிவரையிலும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி மற்றும் பெல்மதுளை ஆகிய பொலிஸ் பிரிவுகளில், இன்றையதினம் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சகல கிராமங்களும் முழுமையாக தடைவிதிக்கப்படும்.
இரத்தினபுரி முத்துவ மாணிக்கக்கல் வர்த்தகரின் குடும்பத்திலுள்ள இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது இனங்காணப்பட்டுள்ளது. இத60 னையடுத்தே, ஊரடங்கு சட்டத்தை தளர்த்தவிடாமல் இருப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதேவேளை, இரத்தினபுரி மத்துவ பிரதேசத்தில் 60 குடும்பங்கள் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.