அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர் கண்டறியப்பட்டதை அடுத்து, அக்கரைப்பற்றுக்குள் செல்வதற்கான சகல வீதிகளும் பொலிஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன.
அக்கரைப்பற்று அம்பாறை வீதி, அக்கரைப்பற்று கல்முனை வீதி, அக்கரைப்பற்று பொத்துவில் வீதிகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன.
கொரோனா தொற்றாளர் இனங்காணப்பட்டதை அடுத்து, அவருடன் வருகைதந்திருந்த குடும்ப அங்கத்தவர்கள் மூவர், அவர்களுடன் கொழும்பிலிருந்து வருந்ததை வாகனத்தின் சாரதி உட்பட அறுவர் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் இனங்காணப்பட்டத்தை அடுத்தே, அக்கரைப்பற்று மூடப்பட்டுள்ளது.