ஊரடங்கு சட்டத்தை மீறுவோருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
ஊரடங்கு சட்டத்தை மீறினால், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு அளிக்கப்படும் 14 நாள், தனிமைப்படுத்தல் போல, தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அவர்கள் அனுப்பிவைக்கப்படுவர் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.