திருகோணமலை மாவட்டத்தில் கொவிட் 19 தொடர்பான தனிமைப்படுத்தல் செயற்பாடு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் கிரமமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன இன்று(9)தெரிவித்தார்.
அதன்படி இதுவரை வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த 744 பேரும் உள்நாட்டில் பிற மாவட்டங்களில் இருந்து வருகை தந்த 1452 பேரும் என மொத்தமாக 2196 பேர் சுய தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர்களுள் வெளிநாடுகளில் இருந்த வந்த 676பேரினதும் உள்நாட்டுலிருந்து வந்த 656 பேரினதும் சுய தனிமைப்படுத்தல் செயற்பாடு பூர்த்தியடைந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
அத்துடன் 10 சந்தேகத்திற்கிடமான நபர்கள் அடையாளம் காணப்பட்டு உரிய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் அவர்கள் அனைவருக்கும் குறித்த தொற்று காணப்படவில்லை என்று ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை மாவட்டம் இற்றைவரை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பாக உள்ளதாகவும் தொடராக இதனைப்பேண அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் மாவட்ட அரசாங்க அதிபர் வேண்டிக்கொண்டார்.