கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டிருந்த கைதியொருவர், வைத்தியசாலையிலிருந்து நேற்றுமாலை தப்பியோடியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பூஸா சிறைச்சாலையிலிருந்து காய்ச்சல், இருமல் நோய் அறிகுறி இருந்தமையால், அந்த கைதி, காலி காரப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரை பரிசோதனைக்கு உட்படுத்தியதில், கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் எவையும் முதலில் தென்படவில்லை. எனினும், இரண்டொரு நாட்களுக்கு வைத்தியசாலையின் வாட்டில் அவர் அனுமுதிக்கப்பட்டார்.
மாத்தறை சிறையிலிருந்து பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டவர் என்றும், வீடுகள் உடைத்து கொள்ளையடித்த சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.