அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் விரைவான தேய்மானம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இந்நிலையில், வெளிநாட்டு நாணயம் இலங்கையில் இருந்து வெளியேறாது இருக்க மத்திய வங்கி மேலும் சில கட்டுப்பாடுகளை இன்று கொண்டு வந்துள்ளது.
இன்றும் டொலருக்கு எதிரான ரூபாவின் விற்பனை பெறுமதி 200 ரூபாவாக பதிவாகியிருந்தது.
இந்நிலையில் இலங்கையில் வசிப்போரால், வெளிநாட்டு முதலீட்டு கணக்குகள் மூலம் வெளிநாட்டு முதலீடுகளுக்கு வெளிநாட்டு பணம் அனுப்புவதற்கு வழங்கப்பட்ட பொது அனுமதியை இடைநிறுத்தல்.
இலங்கையில் வசிப்பவர்கள் வைத்திருக்கும் வணிக வெளிநாட்டு நாணயக் கணக்குகள் அல்லது தனிநபர் வெளிநாட்டு நாணயக் கணக்குகள் மூலம் வெளிப்புறமாக அனுப்பப்படும் பணங்களை இடைநிறுத்தல் உட்பட்ட பல கடடுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.