பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வியாழக்கிழமை தீவிர சிகிச்சையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, நார்மல் வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
போரிஸ் ஜான்சன் கொரோனா வைரஸால் 10 நாளுக்கும் மேல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு இருந்தார்.
ஆனால், நோய் பாதிப்பு அதிகரித்தது. எனவே, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் திங்களன்று தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையின் வார்டுக்கு போரிஸ் திரும்பி அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் "மிகவும் நல்ல மனநிலையில்" இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.