கொரோனா வைரஸை உலக நாடுகளுக்கே வியாபிப்பதற்கு, சீனாவே முழுமுதற் காரணமென குற்றஞ்சாட்டியுள்ள நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு, சீனாவுக்கு எதிராக வழங்குத் தாக்கல் செய்வதற்கு தீர்மானித்துள்ளது.
கொரோனா வைரஸ், சீனாவில் இருந்துதான் பரவியது என்பது உலகமே அறிந்த விடயமாகும். ஆகையால், கொரோனா வைரஸ் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட நிபுணர் குழுவொன்றை நியமிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம், அவ்வமைப்பு கோரியுள்ளது.
அதுமட்டுமன்றி உலகிலுள்ள சகல நாடுகளுக்கும் சீனா நட்டஈடு செலுத்தவேண்டும் என்றும் அவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சீனாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவேண்டும் என்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதற்கு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.