கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான, மேலும் ஏழுபேர் இனங்காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான எவரும் நேற்று (10) கண்டறியப்படவில்லை. இதனால் பெரும் சந்தோஷமாக இருந்தது என்று தெரிவித்த அவர்,
நேற்றிரவு ஏழுபேர் இனங்காணப்பட்டனர். இவர்கள் சிக்கிக்கொண்டதும் பெரும் சந்தோஷமாகும். இவர்களுடன் இணைந்து மொத்தமாக 197 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஏழுபேரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள், அந்த நபர் முச்சக்கரவண்டி சாரதி, நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த அவருக்கு பெரும் எண்ணிக்கையிலான நபர்களுடன் தொடர்பு உள்ளது என்றும் மருதானையுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது என்றும் அவரி தெரிவித்துள்ளார்.
புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமையவே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.