தற்போது நாட்டில் அமுலில் இருக்கும் சுகாதார நடைமுறை இதேபோன்று முன்னெடுக்கப்படுமாயின் ஊரடங்கு சட்டத்தை 20 ஆம் திகதிக்கு பின்னர் பகுதி, பகுதியாக தளர்த்துவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்று அத்தியாவசிய சேவைகள் தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் பிரதானி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எனினும், கொரோனா வைரஸ் நிலைமை கூடுதலாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள மேல் மாகாணத்தில் தங்கியிருக்கும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை, அவர்களின் கிராமங்களுக்கு செல்வதற்கு அனுமதியளித்தால், 20 ஆம் திகதிக்கு பின்னர், ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதற்கான சந்தர்ப்பம் இல்லாமற் போகும் என்றார்.
மேல் மாகாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு புத்தாண்டுக்கு செல்வதற்காக, போக்குவரத்து அனுமதிக்காக 5 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தற்போதைய நிலைமையில் அவர்கள், அனுப்பிவைக்கப்பட்டால், தற்போதிருக்கும் கொரோனா வைரஸ் நிலைமை இன்னும் வியாபிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.