கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்தில், நிவித்திகல பொலிஸ் பிரிவுகளில் மீள அறிவிக்கும் வரையிலும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரையிலும் தொடரும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை, ஏனைய மாவட்டங்களில், எதிர்வரும் 14ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம், ஏப்ரல் 16ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அன்றையதினம், காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம், அன்றையதினம் மாலை 6 மணிக்கு மீளவும் அமுல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.