எதிர்வரும் 20 ஆம் திகதி பாடசாலைகள் அனைத்தும் இரண்டாம் தவணைக்காக திறக்கப்படுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அத்திகதியும் பிற்போடப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் மே மாதம் 10ஆம் திகதி வரை திறக்கப்படமாட்டாது என்றும் அந்த வகையில், 2020ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணைக்காக, மே மாதம் 11ஆம் திகதியன்று, பாடசாலைகள் திறக்கப்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொவிட்-19 பரவும் அபாயம் காரணமாக, அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டிருந்த நிலையில், இம்மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்தது. எனினும், நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டே, பாடசாலையை 11ஆம் திகதி மீள் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது