ஒருவர் புகைத்த புகைப்பொருளை ஏனைய அறுவரும் மாறிமாறி இழுத்து, புகைத்தமையால் கொரோனா தொற்று அறுவருக்கும் பரவியிலிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஜா-எல சுதுவெல்ல பிரதேசத்தில் சிக்கிய ஆறுபேருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும், ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி இரவு கைதுசெய்யப்பட்டனர்.
அவர்கள், ஒலுவில் தனிமைப்படுத்தல் மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
அந்த அறுவரும், தேய்காய்களை களவெடுக்க சென்ற நபருடன் இணைந்து, ஒரேயொரு புகைப்பொருளை மாறிமாறி புகைத்துள்ளனர்.
புகைப்பொருளை முதலாவதாக புகைத்த நபருக்கு கொரோனா தொற்று இருந்துள்ளது. அதனை பின்னரே, ஏனையோருக்கு அத்தொற்று பரவியுள்ளது என அறியமுடிகின்றது.