ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொரோனா வைரஸ் வியாபிக்காமல் இருப்பதற்கு அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை கரு ஜயசூரிய, பாராட்டியுள்ளார்.
மக்களை ஒன்றுகூடவிடாது தடுப்பதற்கான நடவடிக்கைளை அரசாங்கம் எடுத்த நடவடிக்கையால், கொரோனாவை கட்டுப்படுத்த முடிந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல, மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குதல், சுகாதார சேவை, பாதுகாப்பு பிரிவு, பொலிஸ் ஆகியோரின் செயற்பாடுகளையும் முன்னாள் சபாநாயர் கரு ஜயசூரிய பாராட்டியுள்ளார்.