web log free
December 21, 2024

கொரோனா குணமடைந்தவர்- முழு கிராமமும் ஓடினார்

புத்தளம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி, குணமடைந்தவர் மீண்டும் வீட்டுக்கு சென்றிருந்தார்.

எனினும், இன்னும் 14 நாட்களுக்கு வீட்டுக்குள்ளே இருக்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. எனினும், அந்த ஆலோசனையை கேட்காது, கிராமம் முழுவரும் அவர் சுற்றி திரிந்துள்ளார். 

மக்கள் சுகாதார பரிசோதகர், அவருடைய வீட்டுக்கு சென்றிருந்த போது, அவ்வீட்டில் அவர் இருக்கவில்லை. 

அதனையடுத்து அவரை கண்டுப்பிடித்த மக்கள் சுகாதார பரிசோதகர்,  அவரை வீட்டுக்குள்ளே எதிர்வரும் 24ஆம் திகதி வரையிலும் இருக்குமாறும் அறிவுறுத்துள்ளார்.

Last modified on Sunday, 12 April 2020 02:49
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd