விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மரக்கறிகளின் மீது மண்ணெண்ணை ஊற்றி நாசப்படுத்திய சம்பவம் தொடர்பில் பலாங்கொடை நகர சபையின் தலைவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பண்டாரவளையிலிருந்து வருகைதந்திருந்த வர்த்தகர்கள் சிலர், ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டமையால், பலாங்கொடை பிரதேசத்தில் நிறுத்தி வைத்து வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த போதே, மரக்கறிகளை விற்க விடாது, அவற்றின் மீது மண்ணெண்ணையை ஊற்றியுள்ளார்.
அதனடிப்படையில், நகர சபைக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு, சப்ரகமு மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவைக்கு விடுத்த அறிவுறுத்தல்களுக்கு அமையவே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.