ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தப்படவிருந்த பொதுத் தேர்தல், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக காலவரையறை இன்றி ஒத்திவைக்கப்பட்டது.
எனினும், அந்த தேர்தலில், மே மாதம் இறுதியில் அல்லது ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தேர்தலில், பிரசார நடவடிக்கைகளுக்காக பொதுமக்கள் பங்கேற்கும் எந்தவொரு கூட்டத்தை நடத்துவதற்கு அனுமதி வழங்காமல் இருப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
1988 ஆம் ஆண்டு ஜே.வி.பி கிளர்ச்சியின் போது, பொது மக்கள் பங்கேற்கும் வகையில், பொது கூட்டங்கள் நடத்தப்படாமல் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டமை யாவரும் அறிந்ததே. அதேபோலவே, பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.
மிகவிரைவில் தேர்தலை நடத்தி, நிலையான பாராளுமன்றம் ஒன்றை உருவாக்கும் நோக்கிலேயே பொதுத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அறியமுடிகின்றது.