சிங்கள-தமிழ் புதுவருட புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் சில மணிநேரங்களை இருக்கின்றன. இந்நிலையில், இலங்கை பொலிஸார் அதிரடியான நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளனர்.
அதன்பிரகாரம், நாளை (14) காலை 6 மணிவரையிலும் விசேட சுற்றிவளைப்பு தேடுதலைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
இந்த விசேட நடவடிக்கை இன்று மாலை 6 மணிக்கு ஆரம்பமானது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
மதுபோதையில் தள்ளாடி, ஊரடங்கு சட்டத்தை மீறியமை, ஊரடங்கு சட்ட அனுமதியை முறைக்கேடாக பயன்படுத்தியமை, உள்ளிட்டவை தொர்பில் கைதுசெய்வதற்கே, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டள்ளது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
அவ்வாறு கைதுசெய்யப்படுபவர்களுக்கு எதிராக கடுமையாக சட்டம் அமுல்படுத்தப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.