இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 218ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், மேலும் இரண்டு பிரதேசங்களை முற்றாக முடக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பேருவளை பன்னில மற்றும் சீனன் கொட்டுவ பகுதிகள் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் மிக்க பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் அந்த இரண்டு பிரதேசங்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது என்றார்.