web log free
December 21, 2024

கோத்தாவின் அதிகாரம் குறித்து மொட்டுக்குள் குழப்பம்

பாராளுமன்றத் தேர்தலுக்கான திகதியை தீர்மானிக்கின்ற பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைருக்கே சாரும் என்று தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, மாறாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் மாற்றுத் திகதியை நிர்யணிக்க அதிகாரம் கிடையாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

பொதுத் தேர்தல் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், மாற்றுத் திகதியை நிர்யணிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாக பொதுஜன முன்னணியில் ஒருசிலரும், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே அந்த கடமை இருப்பதாக மறுசாராரும் கூறிவருவதால் கட்சிக்குள் குழப்பமான நிலை உருவாகியுள்ளமை அம்பலமாகியுள்ளது.

இந்த நிலையில் மாற்றுத் திகதியை நிர்ணயிப்பதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு அதிகாரம் இருப்பதாக கடந்த 4ம் திகதி பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சியான பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரான சட்டத்தரணி உதய கம்மன்பில ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.

எனினும் கண்டியில் நேற்றைய தினம் மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான கெஹலிய ரம்புக்வெல, தேர்தலுக்கான மாற்றுத் திகதியை நிர்ணயிப்பதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு அதிகாரம் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார்.

Last modified on Tuesday, 14 April 2020 02:14
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd