தூக்கத்தில் இருந்த இரண்டு பிள்ளைகளை கிணற்றுக்குள் வீசி கொலை செய்த கொடூர சம்பவம் புத்தாண்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓட்டமாவடி-மாவடிச்சேனை பாடசாலை வீதியில் உள்ள வீடு ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால், அப்பகுதியே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
மேற்படி இரண்டு பிள்ளைகளின் ஜனாஸாக்களும் மீட்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இச்சம்பவத்தை அடுத்து சந்தேக நபரான குறித்த பிள்ளைகளின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
11 வயதுடைய ஆண்பிள்ளையும் 9 வயதுடைய பெண்பிள்ளையுமே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர் .