web log free
September 16, 2024

இலங்கைக்கு அமெரிக்கா வாழ்த்து

இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொண்டு, இணைந்து பணியாற்றுவதற்கு விரும்புவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 71 ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு அவர், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “தேசிய நாளைக் கொண்டாடும் இலங்கைக்கு, அமெரிக்க அரசாங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுவான ஜனநாயக பெறுமானங்களின் அடிப்படையில் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தின் நலன்களைப் பகிர்ந்து கொள்வதற்கு, இலங்கையுடனான கூட்டை கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா ஆர்வமாக உள்ளது.

இலங்கையின் ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பு செயற்பாடுகள் உங்கள் நாட்டிற்கு தொடர்ந்து முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை இன்னும் ஆழமாக்கிக் கொண்டு, செழிப்பை ஊக்குவித்து, நிலையான மற்றும் அமைதியான எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு, இணைந்து பணியாற்ற நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும், தேசிய நாளைக் கொண்டாடும் உங்களுக்கு வாழ்த்துகள்” என, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா, இந்தோ- பசுபிக், இராஜாங்கச் செயலர்