கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து, ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அக்காலப்பகுதியில், அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டு, அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டன.
இந்நிலையில், கதுருவெல பகுதியில் அம்பியூலன்ஸ் வண்டியில் மதுபான போத்தல்களை கொண்டு சென்ற வைத்தியசாலை ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.