அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ( சிஐடி) வாக்குமூலம் அளித்து கொண்டிருக்கின்றார்.
மன்னார் காணி விவகாரம் தொடர்பிலேயே அவர் வாக்குமூலம் அளித்துகொண்டிருக்கின்றார் என பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது.
சுமார் நான்கரை மணிநேரம் அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், தன்னுடைய அரசியல் பயணத்தை தடுக்கும் வகையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே இவ்வாறான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என ரிசாத் பதியூதீன் குற்றஞ்சாட்டியுள்ளார்.