web log free
September 08, 2024

நாளாந்தம் 14 மணிநேரம் ஊரடங்கு தளர்த்தல்

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் காலை நேரங்களில் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது

அதற்கமைய தினமும் காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டத்தை நீக்கி மீண்டும் இரவு 8 மணிக்கு அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் கொரோனா அபாய வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

காலை நேரங்களில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும் அரசாங்க சேவைக்கு 20 வீதமான அரச ஊழியர்கள் மாத்திரமே அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும் தனியார் துறையினர் பணி செய்வதற்கான நேரமாக காலை 10 மணி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் பிரிவின் அலுவலக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் அனைத்து ஊரியர்களும் இரவு 8 மணிக்குள் அவர்களுக்கு வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்பதுடன், 8 மணியிலிருந்து காலை 6 மணி வரை மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதேவேளை அடுத்த வாரம் முதல் பகுதியளவில் இலங்கையை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Last modified on Saturday, 18 April 2020 03:03