கொழும்பு, வாழைத்தோட்டம் பண்டாரநாயக்க மாவத்தையில் வசித்துவந்த, கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணின் இரண்டாவது மகனால் விநியோகிக்கப்பட்ட முகக் கவசங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளதுடன் பாமசியும் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
கொஹூவளை சரணங்கர பாமசியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 550 முகக் கவசங்களே இவ்வாறு தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன.
அந்த பெண்ணின் மகன், மற்றுமொருவருடன் வந்தே முகக் கவசங்களை விற்பனை செய்துள்ளார்.
இதேவேளை, அந்த பாமசியின் உரிமையாளர், மருந்தாளர்கள் இருவர் அவர்களின் வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த முகக் கவசங்கள் கடந்த 5ஆம் திகதியன்றே, மேற்படி பாமசிக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
அந்த முகக் சவசங்களை ஏற்றிவந்த வாகனத்தின் சாரதியாக, அந்தப் பெண்ணின் இரண்டாவது மகனே இருந்துள்ளார் என விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.