மார்ச் மாதம் 20ஆம் திகதியன்று அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தை, தொடர்ந்து நீடிப்பதற்கு எவ்விதமான எதிர்ப்பார்ப்பும் அரசாங்கத்துக்கு இல்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று (18) அல்லது நாளை (19) இன்றேல், நாளை மறுதினம் (20) ஊரடங்கு சட்டம் தொடர்பில் தெளிவான அறிவிப்பொன்று வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
எது எவ்வாறெனினும், கொழும்பு, களுத்துறை, கம்பஹா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட அதிக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது தொடர்பில், கவனமாக முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வைரஸ் தொற்று இல்லாத ஏனைய மாவட்டங்களில், ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடக்குக்கு விஜயம் செய்ததன் பின்னர், ஊரடங்களுக்கு கருத்துரைத்த போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.