web log free
May 18, 2024

ஊரடங்கில் அம்பாறையில் ஒரு நல்லசெய்தி

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதையடுத்து நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம், தொடர்ந்து அமுலில் உள்ளது.

இந்த ஊரடங்கு சட்டத்தை பயன்படுத்தி, சட்டவிரோதமான செயற்பாடுகள் சில முன்னெடுக்கப்படுகின்றன.

எனினும், சில நல்லசெய்திகளும் காதுகளுக்கு இனிமை தருகின்றன.

அந்தவகையில் அம்பாறை, நிந்தவூரை சேர்ந்த 29 வயதான பெண்ணொருவர், மூன்று குழந்தைகளை நேற்றிரவு பெற்றெடுத்துள்ளார்.

கல்முனை அஷ்ரப் ஞாபகாரத்த வைத்தியசாலையிலேயே இப்பெண், நேற்றிரவு 9 மணியளவில்,மூன்று குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

அந்த பெண், நேற்றுக்காலையிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த மூன்று குழந்தைகளில், 2.6 கிலோகிராம் நிறையுடைய பெண்ணும், 2.3 கிலோகிராம் நிறையுடைய இரண்டு ஆண் குழந்தைகளும் அடங்குகின்றனர்.

நால்வரும் சுகதேகியாக இருக்கின்றனர் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. 

Hospital sources said the mother and infants are in good health.

The birth had taken place at a time when there were less patients visiting hospitals due to the coronavirus outbreak.