கொரோனா வைரஸ் தொற்று ஒருபுறமிருக்கு பொதுத் தேர்தல் தொடர்பிலான வாத விவாதங்கள் கருத்து மோதல்களுக்கு குறைவில்லை.
ஏப்ரல் 25ஆம் திகதியன்று நடத்தவிருந்த பொதுத் தேர்தல், கொரோனா தொற்று காரணமாக திகதி குறிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தலை நடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கும் முக்கியமான கூட்டமொன்று, தேர்தல்கள் செயலகத்தில் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம், பாராளுமன்றக் கூட்டத்தொடரை, மார்ச் மாதம் 2ஆம் திகதியன்று கலைத்துவிட்டார். அதன்பிரகாரம், ஜூன் மாதம் ஆம் திகதி கூட்டப்படவேண்டும்.
எனினும், இன்று (18) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேர்தலுக்கான திகதியை குறிப்பிடாமல், தேர்தலை ஒத்திவைப்பதற்கான எந்தவொரு அதிகாரமும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு இல்லை என்றார்.