பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படவேண்டுமாயின், நாடு சாதாரண நிலைமைக்கு திரும்பி, ஐந்து வாரங்கள் (35 நாட்கள்) கடந்திருக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தலை நடத்துவதற்கான திகதியை, தேர்தல்கள் ஆணைக்குழு இதுவரையிலும் குறிக்கவில்லை. அதுதொடர்பில் தீர்மானத்தையும் எட்டவில்லை. எனினும், தேர்தல் நடத்தப்படுவது தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. பல தகவல்களும் வெளியாகியுள்ளன.
நாடு தற்போது முகம் கொடுத்திருக்கும் நிலைமை உள்ளிட்ட தற்போதைய தேர்தல் நிலைமை குறித்து, நாளை மறுதினம் (20) முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெறவிருக்கிறது.