ஊரங்கு சட்டம் தொடர்பிலான புதிய அறிவிப்பு ஜனாதிபதி செயலகத்தினால் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து, மார்ச் 20ஆம் திகதி முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதியிலிருந்து தளர்த்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் மாவட்டங்கள், நீக்கப்படும் மாவட்டங்கள் மற்றும் மாவட்டங்களுக்குள் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் பிரதேசங்கள், நீக்கப்படும் பிரதேசங்கள் தொடர்பிலான முழு விவரம் இதோ.......
1. கொழும்பு, கம்பஹா, கண்டி, களுத்துறை, புத்தளம், கேகாலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களை தவிர, ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் 20ஆம் காலை 5 மணிமுதல் இரவு 8 மணிவரையிலும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும். மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையிலும், மேலே குறிப்பிட்ட நேரங்களில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும். ஒவ்வொருநாளும் இரவு 8 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.
2.கண்டி மாவட்டத்தில் அலவத்துகொட, அக்குறணை ஆகிய பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் நீக்கப்படாது.
3. கேகாலை மாவட்டத்தில், வறக்காபொல பொலிஸ் பிரிவில், ஊரடங்கு சட்டம் நீக்கப்படாது.
4. அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலும் ஊரடங்கு சட்டம் நீக்கப்படாது.
5. கண்டி, கேகாலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில், மேலே குறிப்பிட்ட பொலிஸ் பிரிவுகளை தவிர, ஏனைய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம், ஒவ்வொருநாளும் காலை 5 மணிக்கு நீக்கப்பட்டு, அன்றிரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.
6.கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுகளை தவிர, ஏனைய பொலிஸ் பிரிவுகளில், எதிர்வரும் 22 ஆம் திகதி முதல், மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையிலும் காலை 5 மணிக்கு நீக்கப்படும் ஊரடங்கு சட்டம் அன்றிரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.
7.மேலே குறிப்பிட்ட மாவட்டங்களில், கீழ்கண்ட பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் நீக்கப்படாது.
- கொழும்பில் - கொட்டாஞ்சேனை, பம்பலப்பிட்டிய, கிரேண்டபாஸ், வாழைத்தோட்டம், மருதானை, கொத்தொட்டுவ, முல்லேரியாவ, வெல்லம்பிட்டி, கல்கிஸை மற்றும் கொஹுவள
- கம்பஹா- சீதுவ, ஜா-எல, கொச்சிகடை
- புத்தளம்- புத்தளம், மாரவில, வென்னப்புவ
- களுத்துறை- பண்டாரக, பேருவளை, அட்டலுகம மற்றும் பயாகல
8. அதனடிப்படையில்
- கொழும்பில் - கொட்டாஞ்சேனை, பம்பலப்பிட்டிய, கிரேண்டபாஸ், வாழைத்தோட்டம், மருதானை, கொத்தொட்டுவ, முல்லேரியாவ, வெல்லம்பிட்டி, கல்கிஸை மற்றும் கொஹுவல
- கம்பஹா- சீதுவ, ஜா-எல, கொச்சிகடை
- புத்தளம்- புத்தளம், மாரவில, வென்னப்புவ
- களுத்துறை- பண்டாரக, பேருவளை, அட்டலுகம மற்றும் பயாகல ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில், ஊரடங்கு சட்டமானது மறு அறிவித்தல் வரையிலும் நீக்கப்படாது.
9. ஏதாவது பிரதேசத்தில் கொரோன வைரஸ் தொற்றாளர் இருப்பது கண்டறியப்பட்டால், அந்த பிரதேசத்தில் ஊரடங்கு சட்டம் மீளவும் அமுல்படுத்தப்படும்.
10. இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்டுள்ள கிராமங்களிலிருந்து வெளியேறுவதற்கோ அல்லது அப்பிரதேசங்களுக்குள் உள்நுழைவதற்கோ எவருக்கும் அனுமதியளிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
11. ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் பிரதேசங்களில், அத்தியாவசிய சேவைகள் பிரதான வீதிகளின் ஊடாக இடம்பெறும்.
12. ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட மாவட்டங்களில், அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே, பயணிக்கமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.