தனிமைப்படுத்தல் முகாமில் அனுமதிக்கப்பட்ட பெண்களில் இருவர், அந்த முகாமிலிருந்து நிர்வாணமாக தப்பியோடுவதற்கு முயற்சித்துள்ளனர்.
கந்தகாடு மத்திய நிலையத்தில் இருந்தே, அவ்விருவரும் நேற்றிரவு தப்பியோடுவதற்கு முயற்சித்துள்ளனர்.
அதிகளவு போதைப்பொருளுக்கு அடிமையான நபரொருவர் அந்த முகாமிலிருந்து தப்பியோடுவதற்கு முயற்சித்துள்ளார். அவருடன் இணைந்தே இவ்விரு பெண்களும் நிர்வாணமாக தப்பியோடுவதற்கு முயற்சித்துள்ளனர் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
போதைப்பொருளுக்கு கடுமையாக அடிமையாகியிருந்த இவர்கள், கைதுசெய்யப்பட்டு மீண்டும் தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.