2019 ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய அனைத்துச் சந்தேக நபர்களையும் அவர்களின் தகுதிகளைக் கருத்திற் கொள்ளாது அவர்களைக் கைது செய்வதற்காக பொலிஸ் விசாரணைக் குழுவினர் தற்போது துரிதமாக செயற்பட்டு வருகின்றனர் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
குறித்த குண்டுத் தாக்குதலுடன் எந்தவிதத் தொடர்பும் இல்லை எனக்கூறினாலும், அந்த தாக்குதலை மூடி மறைக்க முனைந்தாலும் அதற்கு எவ்வகையிலும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் பிரதமர் கூறினார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் எங்களுக்குத் தொடர்பில்லை என்று சந்தேக நபர்கள் கூறினாலும் அதிலிருந்து விலகிவிட முனைந்தாலும் எந்தவித மன்னிப்பும் அவர்களுக்குக் கிடைக்க மாட்டாது எனவும் அவர் மேலும் தெளிவுறுத்தியுள்ளார்