ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஊரடங்கு உத்தரவை மீறியமை மற்றும் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நுகேகொடை நீதவான் நீதிமன்றில் இன்று (20) முன்னிலைப்படுத்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.