கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இன்று (21) அதிகரிக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில், கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நபர்களின் இரத்த மாதிரி பரிசோதனை, இன்று (21) கிடைக்கும்.
எனினும், கொரோனா வைரஸ் தொற்று சமூகத்துக்குள் பரவவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு, வாழைத்தோட்டத்தில் சிக்கியவர்களும் தனிமைபடுத்தப்பட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.