கட்டார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் ஏ.எஸ்.பி.லியனகே பதவியில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.
முன்னதாக அவரை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்புமாறு உத்தரவிட்டார் என செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும், தாம் பதவி விலகல் கடிதத்தை அனுப்பியதாகவும், ஜனாதிபதி அதனை ஏற்றுக்கொண்டார் என்றும், தம்மை திருப்பி அழைக்கவில்லை எனவும், ஏ.எஸ்.பி.லியனகே தெரிவித்துள்ளார்.
விரைவில் இலங்கைக்கு திரும்பவுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், இராஜதந்திரியாக தனது அதிகாரபூர்வ பணிகள் முடிந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
அண்மையில் ஆளுநர்கள் நியமனம் இடம்பெற்ற போது, ஏ.எஸ்.பி.லியனகேக்கு, ஆளுநர் பதவி வழங்கப்படும் என்று, எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், அவருக்கு ஆளுநர் பதவி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.