மஞ்சள் தூளுக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இன்று (21) முதல் அமுலாகும் வகையில், ஒரு கிலோ கிராம் மஞ்சள் தூளின் விலை ரூ. 750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் அதிவிசேட வர்த்தமானி அறிவுப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.
2003 ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தின் 20(5) ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் செயற்படுகின்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது, இவ்வறிவித்தலை வெளியிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இறக்குமதியாளர், உற்பத்தியாளர், வழங்குனர் அல்லது வியாபாரி ஆகிய எவருக்கும் குறித்த விலையை விட மேலதிகமாக விற்கவோ, விற்பனைக்கு விடவோ, விடவோ விற்பனைக்காக வெளிப்படுத்தவோ, படுத்த முடியாது என கட்டளையிட்டுள்ளது.