இலங்கையில், 11 மாவட்டங்களில் எந்தவொரு கோரோனா நோயாளியும் இதுவரையிலும் இனங்காணப்படவில்லை என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பகுதியின் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் ஆகக் கூடுதலாக 110 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
களுத்துறையில் 45
புத்தளத்தில் 35
கம்பஹாவில் 32
யாழ்ப்பாணத்தில் 16
கண்டியில் 7
இரத்தினபுரியில் 5
கேகாலையில் 3
குருநாகல், மாத்தறையில் தலா இருவர் இனங்காணப்பட்டுள்ளனர். அத்துடன் கல்முனையிலும் இருவருக்கு கொரோனா தொற்றியுள்ளது.
காலி, மட்டக்களப்பு,பதுளை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனா இல்லாத 11 மாவட்டங்கள்
இலங்கையில் 25 மாவட்டங்களில், 11 மாவட்டங்களில் இதுவரையிலும் ஒருவர் கூட கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என இனங்காணப்படவில்லை.
மாத்தளை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, அம்பாறை, திருகோணமலை, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலேயே கொரோனா தொற்றாளர் இனங்காணப்படவில்லை