மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர்கள் 11 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதனையடுத்து இலங்கையில், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை, 321 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய நபர்களில் 104 பேர் குணமடைந்துள்ளனர். 7 பேர் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.