கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட சிகை அலங்கரிப்பாளர் கொரோனா தொற்றியிருந்தவேளை சுமார் 25 பேருக்கு தனது சேவையை வழங்கியுள்ளதால் அப்பகுதியில் பலருக்கு தொற்று பரவியிருக்கலாமென அஞ்சப்படுகிறது.
அதுகுறித்து ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுக்க பாதுகாப்புத் தரப்பும் சுகாதார அமைச்சும் தயாராகியுள்ளன.