மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகளில், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நபர்கள் அல்லது குழுக்கள் ஈடுபட்டால், அவர்களுக்கு ஆதரவளிப்பதிலிருந்து அரச நிறுவனங்கள் விலகியிருக்கவேண்டும் என்று குறிப்பிட்டு, தேர்தல்கள் ஆணைக்குழு, ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அமைச்சுகள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், உள்ளூராட்சி மன்றங்கள், இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கக் கூடாது எனவும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.