முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேட்பு தாக்கல் செய்த சிலர் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்ள முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சஜித் பிரேமதாசவின் தலைமையில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் சிரேஸ்ட அமைச்சர்கள் ஆறு பேரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்பது பேரும் இந்த முயற்சியை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ரணில் தரப்புடன் இணைந்து கொள்வது குறித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே இந்தப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இந்தப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுடன் சந்திப்பு நடத்தியதன் பின்னர் அவர்கள் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடாத்துவார்கள் என சிங்கள இணையத் தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.