சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பீ.எஸ்.எம்.சார்ள்ஸை அந்த பதவியில் இருந்து நீக்கி கடற்படையின் முன்னாள் அதிகாரியொருவரை அந்த பதவியில்
நியமித்த அமைச்சரவை பத்திரம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவால் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அந்த அமைச்சரவை பத்திரத்தை நிதியமைச்சர் மீளப்பெற்றுக்கொண்டதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சுங்க திணைக்களத்தின் முன்னாள் இயக்குனர் P.S.M.ஷார்ள்ஸ் மீண்டும் அப்பதவிக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவருக்கு 1 வருடகாலம் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவருடைய 3 மாத சேவையை பொறுத்து அவர் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், சுங்க அதிகாரிகளின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கபடும் தெரிவிக்கப்படுகின்றது.
சுங்க திணைக்களத்தின் முன்னாள் இயக்குனர் P.S.M.ஷார்ள்ஸ் மீண்டும் அப்பதவிக்காக நியமிக்கப்பட்டமைக்கான கடிதம் வழங்கப்படும் வரையில் இந்த போராட்டம் தொடரும் என சுங்க அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.