கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்திய, பேலியகொடை மீன் சந்தையை சேர்ந்த 529 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யப்படவில்லை. என சுகாதார அமைச்சு அறிவித்தது.
பிலியந்தலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மீனவர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டார். அதனையடுத்து, மரக்கறி லொறியின் சாரதியான அவருடைய தந்தைக்கும் கொரோனா தொற்றியிருப்பது கண்டறியப்பட்டது.
இந்நிலையிலேயே, பேலியகொட மீன் சந்தையில், சகல வர்த்தகர்களும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
மீன் சந்தையும் முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டு, தொற்றுகிருமி தெளிக்கப்பட்டது.